இயற் தொழில்நுட்ப தனியார் நிறுவனம் ஒரு வளர்ந்துவரும் சுற்றுப்புற சூழல், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும்.
2011-ம் ஆண்டு சென்னையில் (தமிழ் நாடு, இந்தியா) நிறுவப்பட்ட இயற் தொழில்நுட்ப நிறுவனம், பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முன்னனுபவமும் தகுதியும் கொண்ட பொறியாளர்களை / தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.
இயற் தொழில்நுட்ப நிறுவனம்,
ஆகியவற்றிற்கு சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் தீர்வுகளையும், தொழில்நுட்பங்களையும் வழங்கி வருகிறது.
இயற் தொழில்நுட்ப நிறுவனம், சுத்தமான மாசற்ற சுற்றுப்புற சூழலைக் கொண்டு நீடித்த நிலையான முன்னேற்றத்தை அடைய இயலும் என்பதைத் தன்னுடைய சுற்றுச்சூழல் குறித்தான கொள்கையாகவும்,
ஆகியவற்றின் மூலம் இயற்கை மாசடைவதைத் தவிர்க்கமுடியும் என்ற கருத்தையும் வலியுறுத்திவருகிறது.
இயற் தொழில்நுட்ப நிறுவனம், பயனீட்டாளரின் மனநிறைவை முதன்மையாகக் கருதுகிறது. இதனை குறைந்த செலவில் சூழல் நட்புடன் கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் உறுதி செய்கிறது.
இயற் தொழில்நுட்ப தனியார் நிறுவனம், தன்னுடைய சுத்திகரிப்பு நிலையங்களையும் தயாரிப்புகளையும் இந்தோனேசியா, புருனே மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.