தயாரிப்புகள் / சேவைகள்

முழுமையான ஆயத்தத் தயாரிப்புத் திட்டங்கள்: (Turnkey Supply Projects)

இயற் தொழில்நுட்ப தனியார் நிறுவனம், அனைத்து வகையான தண்ணீர், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுப்புறசூழல் மேம்பாடு தொடர்பான சவால்களுக்கு முழுமையான ஆயத்தத் தயாரிப்புத் திட்டங்களை, திட்ட வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள், விரிவான பொறியியல் தொழில்நுட்ப குறிப்புகள் மற்றும் பொறியியல் இயந்திரங்களை வழங்குதல், சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி இயக்குதல் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் பயனீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது.

ஆய்வக சோதனைகள், சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான வேதிப்பொருட்கள், மழை நீர் வடிகால் மற்றும் சேகரிப்பு தொடர்பான சேவைகளையும் அளிக்கிறது.

இயற் தொழில்நுட்ப நிறுவனம், வழங்கக்கூடிய சுத்திகரிப்பு நிலையங்கள் கீழ்க்கண்ட கட்டுமான முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

 • நிலையான கான்கிரீட் கட்டுமானங்கள்
 • வேறிடத்திற்கு மாற்றக்கூடிய ஸ்டீல் கட்டுமானங்கள்
 • 20 & 40 அடி நீளமுடைய கொள்கலன்களுக்குள் அமைக்க கூடிய நவீன கட்டுமானங்கள்

குடியிருப்புசார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: ( STP )

மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளின் மூலமாக வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு இயற் நிறுவனம் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

 • நீரில் மிதக்கக்கூடிய மிதவைகளை அடிப்படையாகக் கொண்ட வினைகலன் தொழில்நுட்பங்கள். (Moving Bed Bio Reactor)
 • கார்பன் ஊக்கிகளை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பம் (CLRI Patented Method)
 • வரிசைமுறையிலான சுத்திகரிப்பு வினைகலன் (Sequential Batch Reactor)
 • பழமையான கிளர்த்திய கசடுகளைக் கொண்டு சுத்திகரித்தல் (Conventional Activated Sludge Process)
 • உயிர் சவ்வூடு தொழில்நுட்பம் (Membrane Bio Reactor)

தொழிற்சாலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையங்கள்:( ETP )

இயற் தொழில்நுட்ப நிறுவனம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறக்கூடிய கழிவுநீரை சுத்திகரிப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் ஏற்ற பின்வரும் தொழில்நுட்பங்களை சட்டரீதியான வெளியேற்ற விதிமுறைகளுக்குட்பட்ட வகையில் வழங்குகிறது.

 • தீவிர வடிகட்டிகள் (Ultra Filtration) மூலமான, முழுமையான கழிவுநீர் மறுசுழற்சி நிலையங்கள்
 • தீவிர வடிகட்டிகள் மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis) மூலமான, முழுமையான கழிவுநீர் மறுசுழற்சி நிலையங்கள்
 • தலைகீழ் சவ்வூடு பரவல் மற்றும் ஆவியாக்கு வினைகலன் (Evaporator) மூலமான, கழிவுநீர் வெளியேற்றமற்ற (Zero Discharge) நிலையங்கள்.
 • உயிர்வளி (Aerobic) மற்றும் வேதிப்பொருட்களைக் கொண்டு சுத்திகரிப்பதற்கும் முறைகள்.
 • உயிர்வளியற்ற (Anaerobic) சுத்திகரிப்பு முறைகள்
 • குளிர்விப்பு நீராவி (Condensate) சுத்திகரிப்பு முறைகள்

தண்ணீர்/குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: ( WTP )

இயற் தொழில்நுட்ப நிறுவனம், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களின் மூலம் சுத்திகரித்து வழங்குகிறது.

 • தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis)
 • உயர் அழுத்த மணல் வடிகட்டி மற்றும் கரிமணல் வடிகட்டிகள் (Pressure sand & Activated Carbon Filters)
 • இரும்புத்தாது நீக்கு நிலையங்கள் (Iron Removal Plants)
 • கடின நீரை மென்-நீராக்கும் முறைகள் (Softener Plants)
 • கனிம நீக்கு நிலையங்கள் (Demineralization Plants)
 • உவர்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Desalination Plants)

இயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்: ( OPERATION & MAINTENANCE )

இயற் தொழில்நுட்ப நிறுவனம், தான் நிறுவிய நிலையங்கள் மட்டுமல்லாது பிறர் நிறுவிய சுத்திகரிப்பு நிலையங்களையும், தன்னுடைய பணியாளர்களைக் கொண்டு இயக்கியும், நாள்தோறும் தேவையான பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதுமட்டுமின்றி வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களின்படி, பொறியாளர்களை பயனீட்டாளரின் இருப்பிடத்திற்கு அனுப்பி, தேவைக்கேற்ப பழுதுபார்த்தும், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டும் வருகிறது.


ஆய்வக சோதனைகள்: ( LABORATORY MONITORING SERVICES )

இயற் தொழில்நுட்ப நிறுவனம், சுற்றுச்சூழல் தொடர்பான பின்வரும் ஆய்வக சோதனைகளை வழங்குகிறது.

 • சுற்றுப்புற காற்றின் தரம் (Ambient Air Quality).
 • உட்புற காற்றின் தரம் (Indoor Air Quality)
 • தொழிற்சாலை புகைபோக்கி உமிழ்வுகளின் பண்புகள் (Stack Monitoring)
 • மூல தண்ணீர் பகுப்பாய்வு.
 • குடியிருப்புசார் & தொழிற்சாலை கழிவுநீர் ஆய்வுகள்.
 • இரைச்சல் கண்காணிப்புகள் (Noise Monitoring)
 • மண் தரவறிக்கை (Soil Testing)
 • வளிமண்டல கூறுகளின் பகுப்பாய்வு (Meteorological Analysis)

இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள்: ( Supply of Spares and Equipments )

இயற் தொழில்நுட்ப நிறுவனம், சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான பின்வரும் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை பயனீட்டாளரின் தேவைக்கேற்ப அளித்து வருகிறது.

 • நீரேற்று இயந்திரம் (Pumps)
 • காற்றூது இயந்திரம் (Blowers)
 • வடிகட்டிகள் (Filters)
 • கெட்டி சவ்வுகள் (Cartridges)
 • தீவிர வடிகட்டு சவ்வுகள் (Ultra Filtration Membranes)
 • சவ்வூடு பரவல் சவ்வுகள் (Reverse Osmosis Membranes) மற்றும் பல.

தண்ணீர் சுத்திகரிப்பு தொடர்பான வேதிப்பொருட்கள்: ( Water Treatment Chemicals )

இயற் தொழில்நுட்ப நிறுவனம், பின்வரும் சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான வேதிப்பொருட்களை வழங்குகிறது.

 • துகள் சேர்ப்பான் (Flocculent), உறைவிப்பான் (Coagulant), பாலிமர் மற்றும் குளோரின் முதலிய கழிவுநீர் சுத்திகரிப்பு வேதிப்பொருட்கள்
 • மூல தண்ணீர் சுத்திகரிப்பு வேதிப்பொருட்கள்
 • RO ஆன்ட்டிஸ்கேலன்ட், RO pH பூஸ்டர், RO ஆன்ட்டிஆக்சிடன்ட் & RO சுத்திகரிப்பு வேதிப்பொருட்கள்
 • பயோகல்ட்ச்சர்
 • கொதிகலன் தண்ணீர் சுத்திகரிப்பு வேதிப்பொருட்கள்
 • குளிர்சாதனகோபுர தண்ணீர் சுத்திகரிப்பு வேதிப்பொருட்கள்
 • காகித & காகிதக்கூழ் துறைசார் வேதிப்பொருட்கள்

மழைநீர் வடிகால் மற்றும் சேகரிப்பு முறைகள்: ( Rain Water Harvesting )

மழைநீர் வடிகால் மற்றும் நிலத்தடிநீர் சேகரிப்பு முறைகள் குறைந்தளவிலுள்ள சுத்தமான குடிநீருக்கான மாற்றாக அனைவராலும் முன்வைக்கப்படுகிறது. இயற் தொழில்நுட்ப நிறுவனம், மழைநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல் ஆகிய சேவைகளை குடியிருப்புகள், கல்வி, மருத்துவ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கிவருகிறது.